ஜப்பானில் கலாசார திருவிழாவின்போது பூங்காவில் தொடர் குண்டு வெடிப்பு; ஒருவர் பலி

Japan ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே உட்சுனோமியோ நகர் உள்ளது. அங்குள்ள பூங்கா ஒன்றில் நேற்று கலாசார திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சைக்கிள்கள் நிறுத்துமிடத்தில் உள்ளூர் நேரப்படி காலை 11.31, 11.32 மணியளவில் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. அதில் கரும்புகை மண்டலம் உருவானது. ஆனால் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் 11.31, 11.32 மணிக்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தபின்னர், 15 வினாடிகள் கழித்து மூன்றாவது முறையாக பலத்த சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்ததாக பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த குண்டு குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் அடையாளம் காண முடியாதபடிக்கு எரிந்து கரிக்கட்டையாகி விட்டது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply