பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை; ‘‘நாங்களே களத்தில் இறங்கி, பயங்கரவாத குழுக்களை அழிப்போம்’’

USAஐ.எஸ்.ஐ. நடவடிக்கை எடுக்க மறுத்தால், நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிப்போம்’’ என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு போரில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. இதன் காரணமாக பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது.ஆனால் இப்படி நிதி உதவி பெற்றுக்கொண்டு, அனைத்து பயங்கரவாத குழுக்கள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா கருதுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது.பகிரங்க எச்சரிக்கை

 

இந்த நிலையில், வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீவிரவாத நிதி தடுப்பு துணை மந்திரி (பொறுப்பு) ஆதம் சுஸூபின், பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:–பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதில் பிரச்சினை, அந்த நாட்டு அரசாங்கத்திலேயே உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., அங்கு தீவிரமாக செயல்பட்டு வருகிற அனைத்து பயங்கரவாத குழுக்கள்மீதும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. சில குழுக்களின் நடவடிக்கைகளை அது சகித்துக்கொள்கிறது. இன்னும் சில குழுக்கள் மீது மிகவும் மோசமாக (மறைமுக ஆதரவு) நடந்து கொள்கிறது.நாங்களே இறங்குவோம்

 

பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற அனைத்து பயங்கரவாத குழுக்களையும் பின்தொடர்ந்து சென்று நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து, அந்த நாட்டு அரசை வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்கு தயாராக இருக்கிறோம். பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதில் நாங்கள் எந்தளவுக்கு உறுதி கொண்டிருக்கிறோமோ, அதே போன்று தேவைப்பட்டால் அந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்கு, அழிப்பதற்கு நாங்களே தனிப்பட்ட முறையில் களத்தில் இறங்கி செயல்பட தயங்க மாட்டோம்.அதே நேரத்தில் பாகிஸ்தான் பல்வேறு அம்சங்களில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் எங்கள் பங்காளியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.பாகிஸ்தான் களப்பலி

 

அதுமட்டுமின்றி பயங்கரவாதத்தைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான், தானே களப்பலியாகி வருகிறது. அங்குள்ள பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், மசூதிகள் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.ஐ.எஸ். அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.ஆனால், பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் ஏற்க முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply