ஆயர்வேத வைத்தியர்கள் மேற்கத்திய மருந்து வகைகளை பெற்றுக் கொடுப்பதை நிறுத்த வேண்டும் : சுகாதார அமைச்சர்

rajithaஆயர்வேத வைத்தியர்கள் மேற்கத்திய மருந்து வகைகளை பெற்றுக் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என சுகாதார, சுதேச மற்றும் ஊட்டச்சத்து அமைச்சர் டாக்டர் ராஜித சேணாரத்ன தெரிவித்துள்ளார்.ஆயர்வேத வைத்திய சேவையில் முதன்மை சேவை தொடர்பில் அண்மையில் 107 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சர் டாக்கர் ராஜித சேணாரத்ன தலைமையில் நாவின்ன பண்டாரநாயக்க மருத்துவ ஆய்வுகூடத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ‘ஆயர்வேத வைத்திய பட்டப்படிப்பும் பட்டம்தான். மேற்கத்திய வைத்தியர்களின் பட்டத்துடன் நிறுத்த வேண்டாம். இந்த பட்டப்படிப்பும் மிக முக்கியம். 2500 வருட வரலாற்றில் உரிமை கூறும் பாரம்பரிய வைத்திய முறையை பாதுகாப்பதும் நீங்களே. அக்காலத்தில் சுகாதார பிரச்சினைகள் இருந்தது என்பது எனக்கு தெரியாது. மேற்கத்திய வைத்திய முறைமையுடன் நோய்த்தாக்கங்கள் காணக்கூடியதாக இருந்தது. வடகொரியாவில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படுவது அந்நாட்டின் உள்ளுர் வைத்திய முறைமைக்கமையவே. ஆரோக்கியமான மக்கள் உள்ளனர். இந்தியாவின் கேரளா பிரதேசத்தில் இருப்பதும் உள்ளுர் வைத்திய முறையே. சீனாவின் வைத்திய பீடம் மிகவும் வளர்ச்சியடைந்தது.

சீன வைத்திய பீடம் இலங்கையர்களுக்கு அறிமுகப்பபடுத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேள். ஆயர்வேத வைத்திய முறைமை தொடர்பில் ஆராய்ச்சி ஒன்றை நடத்துங்கள். பாரம்பரிய வைத்திய முறையை ஆசிரியர்கள் இன்றி பெற்றுக் கொடுங்கள். அடுத்த வருடம் ஆரம்பத்தில் நான் வட கொரியாவின் உள்ளுர் வைத்திய முறைமையை பின்பற்றுவது தொடர்பில் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளேன். நான் கினற்று சேறு போல் அரசியல் செய்வதில்லை. எனக்கு உள்ளுர் வைத்திய முறைமையை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. நான் நல்ல மனநிலையில் செயல்படுவேன்’ என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply