வங்கிகளில் ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி டெபாசிட்: மத்திய அரசு தகவல்

geldமத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத்தொடர்ந்து கடந்த 10–ந் தேதி முதல் 18–ந் தேதி வரையிலான 9 நாட்களில் சேமிப்பு கணக்குகளில் ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி ‘டெபாசிட்’ செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.33 ஆயிரத்து 6 கோடிக்கான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து நவம்பர் 18–ந் தேதி வரை பொதுமக்கள் ஏ.டி.எம்.கள் மூலமாகவும், வங்கி கவுண்ட்டர்களில் இருந்து நேரடியாகவும் சுமார் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி மதிப்பிலான பணத்தை பெற்றுள்ளனர். பழைய நோட்டுகளை மாற்றவும், சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply