பைலட்கள் வேலைநிறுத்தம்: லுப்தான்ஸா நிறுவனத்தின் 876 விமானச் சேவைகள் இன்று ரத்து
ஐரோப்பா மற்றும் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஜெர்மனியில் மட்டும் சுமார் 5400 பேர் விமானிகளாக (பைலட்) வேலை செய்கின்றனர். தங்களது சம்பளத்தை உயர்த்தித்தர வேண்டும் என இவர்கள் முன்வைத்த கோரிக்கையை லுப்தான்ஸா நிர்வாகம் கண்டுகொள்ளாதததால் பலகட்ட போரட்டங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அதன்பின்னர், 2.5 சதவீதம் அளவில் சம்பள உயர்வு செய்ய நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், 3.7 சதவீதம் சம்பள உயர்வு வேண்டும் என பைலட்கள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கையை முன்வைத்து 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக விமானிகள் அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு தடைவிதிக்குமாறு லுப்தான்ஸா நிர்வாகம் கோர்ட்டில் முறையிட்டது. விமானிகளின் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோர்ட் மறுத்து விட்டது.
இதனையடுத்து, இன்றுகாலை முதல் ஐயாயிரத்துக்கும் அதிகமான விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்விளைவாக தங்களது நிறுவனத்தின் 876 விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக லுப்தான்ஸா நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய வேலைநிறுத்தத்தால் இந்நிறுவனத்துக்கு சொந்தமான யூரோவிங்ஸ், ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ், சுவிஸ் மற்றும் ப்ருசெல்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்படாது என லுப்தான்ஸா நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply