ஜப்பானில் பனிச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாசு என்ற பகுதியை சேர்ந்த உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 52 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்கள் இங்குள்ள பனிமலையில் இன்று காலை மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களில் எட்டு பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக டோக்கியோ நகரில் இருந்துவரும் முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

பனிக்குவியலுக்குள் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply