இரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம் : ஜி.எல். பீரிஸ்

கூட்டுச் சேர்வது என்பது மிகப் பெரும் பொய்யாகும். நாம் தான் மிகச் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள். எம்முடன் தான் அதிகமானவர்கள் உள்ளனர். இரவு விழுந்த குழியில் பகலில் விழுவதற்கு நாம் தயாரில்லையென மஹிந்த சார்பு குழு புதிய கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது பகல் ஒரு கனவாகும். நாம் மீண்டும் ஏமாற மாட்டோம். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதான் உண்மையானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply