இலங்கையில் புத்தாண்டு காலப்பகுதியில் குற்றங்களை தடுக்க விஷேட திட்டங்கள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் குற்றங்களை தடுக்கவும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தவும் நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் பதிவாவதை தடுக்கவும் விஷேட திட்டங்களை பொலிஸ் தலைமையகம் வகுத்துள்ளது. இந் நிலையில் இந்த திட்டங்கள் அனைத்தும் நேற்று முதல் அமுலுக்கு வருவதாகவும் இந்த சிறப்பு நடவடிக்கை ஏப்ரல் மாதம் முடிவுறும் வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் வழமையாக அதிகரிக்கும் வழிப்பறி, வீடுடைப்பு, திருட்டு போன்ற குற்றங்களை கட்டுப்படுத்தவும் விபத்துக்களை தடுக்கவும் உயிராபத்துக்களை குறைக்கவும் பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விஷேட திட்டம் அமுல் செய்யப்ப்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் தலைமையகத்தில்இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply