சோமாலியாவில் தீவிரவாதி என நினைத்து மந்திரியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்
சோமாலியாவில் தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் அடிக்கடி அரசுக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து தலைநகரான மொகடிஷு நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் பொதுப்பணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸ் (வயது 31) நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் காரில் வருவது தற்கொலைப்படை தீவிரவாதிகள் என தவறுதலாக எண்ணி அமைச்சரின் காரின் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காருக்குள் அமர்ந்திருந்த அமைச்சர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலுக்கு பின்னர்தான் அவர் அமைச்சர் என்பது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இத்தகவல் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதும் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியா நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அப்துலாஹி ஷேக் அபாஸ் மிகவும் இளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply