சேதமடையும் நிலையில் உள்ள இந்திய படகுகள் விடுவிக்கப்படும் : அமரவீர

கைப்பற்றப்பட்ட இந்திய படகுகளில் பல சேதமடையும் நிலையில் உள்ளதால் அவற்றை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கடற்தொழிற்றுறை மற்றும் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயரத்ன பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் போது அவர்களுடைய படகுகளை கைப்பற்றும் செயற்பாடு வழமையான ஒன்றாகும். எனினும் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த படகுகள் கடந்த அரசாங்க காலப்பகுதியிலும் விடுவிக்கப்பட்டன. இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு காரணமாக இனி அவர்களுடைய படகுகளை விடுவிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply