அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் ஆகியோர் வட மாகாண புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

வடமாகாண கல்வி, விளையாட்டுத் துறை, மற்றும் சமூகசேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம் ஆகிய துறைகளுக்காக இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். இதற்கமைய வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன் பதவியேற்றுள்ளார்.

புனர்வாழ்வு மகளிர் விவகார மற்றும் சமூகசேவைகள் அமைச்சராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இரு அமைச்சர்களும் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். மூன்று மாதங்களுக்காக தற்காலிக அடிப்படையில் புதிய அமைச்சர்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply