புத்தளத்தில் கழுதைகளே இருப்பதாக நினைத்து செயற்படுவதை நிறுத்தவும் : ரங்கே பண்டார

புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் முறையாக மேற்கொண்டில்லை என நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.இந்த கலந்துரையாடலில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளும், புத்தளம் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டும் நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் நட்புரீதியான முறையில் செய்வதாக குறிப்பிட்டாலும் அது தற்பொழுது மாற்றமடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புத்தளத்தில் கழுதைகளே இருப்பதாக நினைத்து வேலை செய்வதை நிறுத்துவதற்குரிய காலம் வந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார பல கேள்விகளை கேட்டுள்ளார். அந்த கேள்விகளுக்கு அமைச்சின் உயர் அதிகாரிகள் விடைகொடுக்க முடியாமல் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவ்வாறான திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிடும்போது புத்தளம் மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டை எதிரிபார்க்க வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply