புற்று நோயாளர்களுக்கு மரபணு தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை
புற்று நோயாளர்களுக்கு மரபணு தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை வழங்குவதற்காக ‘கைருடா்’ எனும் மருத்துவ வகை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்று முன்தினம் (29) ம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற ‘சுவசேவா’ நியமன நிகழ்வின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ‘தொற்றா நோய்களின் பட்டியலில் புற்று நோய் இரண்டாம் இடத்திலிருக்கின்றது. இன்னும் சில காலம் சென்றால் இந்நோய் முதல் இடத்தைப் பிடிக்கலாம்.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு தொழில்நுட்ப சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயாளர்கள் குணமடைகிறார்கள்.
மருந்து உற்பத்தி கைத்தொழில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. ‘டெப்யூமாட்’ எனும் புற்று நோய் மருந்துகளும் இல்லாமல் போய்விடும்.
இவ்வாறான மருத்துவ ஆராய்ச்சியை கற்கும் விசேட வைத்திய நிபுணர்களை நாம் உருவாக்க வேண்டும்.
இல்லாவிடின் ஆயுர்வேதத்திற்கு ஏற்பட்ட அழிவே இதற்கும் ஏற்படும். உலகம் மாறும் போது நாமும் மாற வேண்டும். தற்போது மரபணு சிகிச்சையை பயன்படுத்தி சிகிச்சையளிக்கும் 07 வைத்தியர்கள் இங்கு இருக்கின்றனர்.
அவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அழைத்து அவர்களுக்கென தனியான வேறு பிரிவொன்றும் அமைக்கப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply