டெங்கு நோயாளர்களுக்கான வசதிகளை அதிகரிக்க ஜனாதிபதி ஆலோசனை

நீர்கொழும்பு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் டெங்கு நோய் பரவுதல் காரணமாக வைத்தியசாலையின் டெங்கு நோயாளர்களின் வாட்டுத்தொகுதியில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை அவதானித்த ஜனாதிபதி, சிகிச்சைகளுக்கு தேவையான வசதிகளையும் அதிகரிக்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்கேற்ப 48 மணித்தியாலங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் சிகிச்சைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தற்காலிக வாட்டுத்தொகுதியை நிர்மாணிக்க இலங்கை இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், தேவையான கட்டில், மெத்தை உள்ளிட்ட ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

டெங்கு நோயாளர்களுக்கான புதிய வாட்டுத்தொகுதி தற்போது துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், ஜனாதிபதியின் ஆலோசனைப்படி டெங்கு நோயாளர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவிலும் புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வைத்தியசாலையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக முப்படையில் கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கேற்ப தற்போது முப்படையின் மருத்துவர்களும், தாதியர்களும் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், விசேட மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நோயாளர்களுக்கான சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply