கனடா 150-வது பிறந்தநாள்: கலைகட்டிய கொண்டாட்டங்கள்

கனடா நாட்டின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவக்கி வைத்தார். கனடா தின விழாக்களில் சுமார் 5,00,000க்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தின் முன் மிகப்பெரிய விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அக்ரோபாட், இசை கலைஞர்கள் மற்றும் வாண வேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கட்டிடங்கள் கண்களை கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

ஒட்டாவாவில் கூடியிருந்த பொதுமக்களுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இளவரசர் சார்லஸ் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். கனடா முழுக்க பல்வேறு நகரங்களிலும் வெவ்வேறு வித்தியாசமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எவ்வித அசாம்பாவிதங்களும் ஏற்பாடமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply