எதிர்காலத்தில் குப்பையிலிருந்து மின்சாரம் : சம்பிக்க

குப்பைகளினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.குப்பைகளை சிறந்த முறையில் முகாமை செய்வதற்கு புத்தளம் அருவக்காறு பிரதேசத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பையும் அதனை அண்டிய நகரங்களிலும் தேங்கியுள்ள குப்பை கூழங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பை கூழங்களால் பொதுமக்களின் வழமையான வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நிலை என்பன பாரிய பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply