பொலிஸ் அதிகாரியை அடையாளம் காட்டினார் மியன்மார் அகதி
மிரிஹான தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள 22 வயதான ரோங்கியோ முஸ்லிம் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரியை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அடையாளம் காட்டியுள்ளார்.கடந்த மாதம் 18ம் திகதி நடைபெற்றதாக கூறப்படும் அந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட தடுப்பு முகாமில் பணியாற்றும் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இதன்படி, நேற்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரியை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதாக, அந்தப் பெண்ணுக்கு சட்ட உதவிகளை வழங்கி வருகின்ற ஆர்.ஆர்.ரி சட்ட நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிராஸ் நூர்டின் தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 20ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிரிஹான தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த, 30 ரோங்கியோ முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply