சிறுபான்மை இனத்தவர்களுக்காக உப ஜனாதிபதி பதவி : புதிய யாப்பில் கோரிக்கை

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உப ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட நான்கு சிறுபான்மைக் கட்சிகள் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் இணைந்து இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பதவிக்காலத்தை கவனத்தில் கொண்டு இந்த உப ஜனாதிபதி பதவியை சிறுபான்மை மக்கள் காலத்திற்கு காலம் பகிர்ந்து கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply