ஜனாதிபதி சிலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : அமைச்சர் டிலான்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பதவிகளுக்குப் பொருத்தமில்லாதவர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான பதவிகளை மாற்றுவது நாட்டுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் நல்லதாக இருக்கும்.
ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சுப் பதவியையும் பறித்தெடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்து கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவையும் விலக்க ஜனாதிபதி முன்வர வேண்டும். கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்த வேண்டும் என்ற தீர்மானத்தை வெளியிட துமிந்த திஸாநாயக்கவுக்கு முடியாது. அதனை கட்சியின் நிறைவேற்றுக் குழுவே தீர்மானிக்க வேண்டும்.
இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமாக தீர்மானங்களை அறிவிப்பவர்களை கட்சியின் செயலாளராக வைத்திருக்கக் கூடாது. கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, ஷமல் ராஜபக்ஷ போன்றவர்களை ஜனாதிபதி செயலாளராக அறிவிக்க வேண்டும் எனவும் டிலான் பெரேரா பதுளையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply