ஓடும் ரெயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 35% அதிகரிப்பு

நாடுமுழுவதும் ரெயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2014-16 ஆண்டுகளில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார். ரெயில்களில் பயணம் செய்யும் பெண்கள் பாலியல் தொந்தரவு, நகை பறிப்பு மற்றும் கொலைமுயற்சி ஆகிய தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், நேற்று மக்களவையில் மத்திய ரெயில்வே துறை இணையமைச்சர் ராஜன் கொஹைன் இது தொடர்பான எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், 2014 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் கிடைத்த புள்ளிவிவரங்களின் படி, 2014-16 வரை 1607 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி வழக்குகளில் தொடர்புடைய 1216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், 344 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply