ஈராக் தூதரகத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் – ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் ஈராக் நாட்டின் உயர் தூதரக கட்டிடம் உள்ளது. (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 11 மணியளவில் இந்த கட்டிடத்தின் வாசலில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தான்.அதேவேளையில், காபுல் நகரின் சில பகுதிகளில் இன்று தற்கொலைப் படை தாக்குதல்களும், துப்பாக்கி சண்டையும் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் தூதரக வளாகத்துக்குள் மறைந்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மனித குண்டு வெடித்து சிதறியபோது எழுந்த புகை மூட்டத்தை அந்நாட்டு தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வரும் நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ செய்திப்பிரிவான ‘அமாக்’ குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply