பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னிறுத்தப்பட்டுள்ள ஷாகித் அப்பாஸி மீது ரூ.22,000 கோடி ஊழல் புகார்

பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமராக ஆளும் முஸ்லீம் லீக் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ள ஷாகித் ககான் அப்பாஸி மீது ரூ.22,000 கோடி ஊழல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி (என்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர், ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் ககான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி அறிவித்தது. இதையடுத்து அப்பாசி தனது வேட்பு மனுவை பாராளுமன்ற செயலாளர் ஜவாத் ரபிக் மாலிக்கிடம் அளித்துள்ளார்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை மந்திரியாக பதவி வகித்த அப்பாஸி மீது, சட்டவிரோதமாக இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களை வழங்கியதாக அந்நாட்டின் தணிக்கை துறை புகார் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply