மேற்கு வங்காளத்தில் 62 வயது மூதாட்டியை கற்பழித்து கொடூரமாக கொன்ற கும்பல்
டெல்லியில் 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்று கும்பல் ஒன்று கற்பழித்தது. பின்னர் இரும்பு கம்பியால் அவரது உடல் பகுதியில் திணித்தனர். இதனால் அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதேபோன்ற ஒரு சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் இப்போது நடந்துள்ளது. அங்குள்ள சுந்தர்பன் மாவட்டம் சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் 62 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவரது வீடு அருகே புதர் பகுதி உள்ளது.
இங்கு சமூக விரோதிகள் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இதை அந்த மூதாட்டி கண்டித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மூதாட்டியை பழிவாங்குவதற்கு திட்டமிட்டனர்.
கடந்த மாதம் 4-ந் தேதி இரவு 10 மணிக்கு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே சென்றார். அப்போது அந்த நபர்கள் அவரை புதர் பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
இந்த கும்பலில் 5 பேர் வரை இருந்தனர். அவர்கள் அந்த மூதாட்டியை மாறி மாறி கற்பழித்தனர். ஆனாலும், ஆத்திரம் தீராத அவர்கள் இரும்பு கம்பியை அவரது வயிற்று பகுதியில் திணித்தனர்.
அது மட்டும் அல்லாமல் பீர் பாட்டிலை உடைத்தும் இதே போல் திணித்தனர். இதில் அவரது கர்ப்பபை சிதைந்ததோடு மட்டும் அல்லாமல் குடலும் சேதம் அடைந்தது. பின்னர் அவரை அங்கேயே போட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
வெளியே சென்ற தாயார் திரும்பி வராததால் அவரது மகன் ரமேஷ்தாஸ் தேடி சென்றார். அப்போது புதர் பகுதியில் தாயார் குற்றுயுரும் குலையுயிருமாக கிடந்தார்.
அவரை கொல்கத்தாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு பல்வேறு ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 27 நாட்களுக்கு பிறகு அவர் உயிர் இழந்தார்.
இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கு வங்காள பெண்கள் கமிஷன் தலைவர் லீனா கங்குலியும் தனியாக விசாரணை நடத்தினார்.
அவர், இறந்தது பற்றி அறிந்ததும் அந்த ஊரை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, கற்பழிப்பு சம்பந்தமாக ராஜேஸ்வர் மைதி (52) என்பவரை கைது செய்து இருக்கிறோம். அவர் ஒருவர் மட்டுமே இந்த செயலில் ஈடுபட்டதாக கூறி இருக்கிறார்.
5 பேர் வரை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் அதுபற்றி விசாரித்து வருகிறோம். கற்பழிப்பில் மேலும் நபர்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply