பயங்கரவாதம் மீளவும் முளைத்துக்கொண்டுதான் இருக்கிறது : பொலிஸ்மா அதிபர்
நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் நேரில் கண்டறிய பொலிஸ்மா அதிபர் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார்.
யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் சிவில் பாதுகாப்பு குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பொலிஸ்மா அதிபர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என தெரிவிக்கப்பட்டாலும் எங்கோ ஒரு மூலையில் அதன் விதையானது மீளவும் முளைத்துக்கொண்டுதான் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருந்த பலர் சமூகத்தோடு மீள இணைக்கப்பட்டாலும் அவர்களது செயற்பாடுகளில் மற்றும் மனநிலையில் வேறுபாடு ஏற்படவில்லை, அவர்கள் முன்னைய மனப்பாங்குடனேயே செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் இது வளர்ந்து செல்வதை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சமூக விரோதே குற்றச் சம்பவங்களின் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply