கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி ஆபத்தில் முடியும்
சுதந்திரக் கட்சியில் இருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சி ஒன்று ஆட்சி அமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெற வேண்டியேற்படும்.அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு-ம் பிரச்சினை களுக்கும் எம்மால் இலகுவில் முகம் கொடுக்கமுடியாது. ஆகவே,கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே வழி.
இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். கூட்டு அரசைத் தொடர்வது குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 82 என்ற அடிப்படையில்தான் ஆசனங்கள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவை. கட்சித் தாவல்களின் ஊடாகத்தான் பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால், முக்கியமான பல பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு இல்லாமல் போய்விடும். இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே நாம் இரண்டு முதன்மைக் கட்சிகளையும் இணைத்துக் கூட்டு அரசை உருவாக்கினோம்.
ஆனால், சுதந்திரக் கட்சியில் இருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சி ஒன்று ஆட்சி அமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெற வேண்டியேற்படும். அப்படி நடந்தால் அது நாட்டில் எதிர்மறையான கருத்துக்களைத் தோற்றுவிக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து ஆட்சி அமைப்பதன்மூலம் ஏற்படும் ஆபத்துக்களுக்குப் -பிரச்சினைகளுக்கும் எம்மால் இலகுவில் முகம் கொடுக்க முடியாது.
அரசில் இருந்து சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் விலகுவதன்மூலம் கட்சியை ஒருபோதும் வளர்க்கமுடியாது. கட்சியின் வளர்ச்சியில் அதன் தலைவர் மைத்திரிக்கு மாத்திரம் பங்கில்லை. மகிந்த ராஜபக்சவுக்கும் பங்குண்டு. அவர் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
சுதந்திரக் கட்சி மகிந்தவைத் தவிர்க்க முடியாது. அதேபோல்,மகிந்தவாலும் சுதந்திரக் கட்சி தவிர்க்க முடியாது. அவருக்குக் கிராம மட்டத்தில் மக்கள் ஆதரவு உண்டு.இந்தச் செல்வாக்கு கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படவேண்டும்.
சந்திரிகாவின் ஆட்சியில் ரணில் விசாரணைக்காக நீதிமன்றக் கூட்டில் ஏற்றப்பட்டவர். அவரும் சந்திரிகாவும் இப்போது இணைந்து செயற்பட முடியும் என்றால் மைத்திரியும் மகிந்தவும் ஏன் இணைய முடியாது?அரசியல் நிலையான எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை.என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply