யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : அதிரடிப்படை தயார் நிலையில்

யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்பு சட்டங்கள் கடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கடந்த தினங்களில் யாழ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து குறித்த பிரதேசங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சிவில் பாதுகாப்பு சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அவசரத் தேவையின் போதும் பொலிஸாருக்கு உதவி வழங்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை தயாராக இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பகுதியின் தற்போதைய நிலை தொடர்பாக இரகசிய பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply