மஹிந்தவை இணைத்துக்கொள்ள மைத்திரி முயற்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துகொள்வதற்கு கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலைமையில் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய, அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அநுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே, நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply