இலங்கையில் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு பொது நினைவிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

இந்த தினத்தை இலங்கை தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினமாக அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் உள்நாட்டு போரில் பலியான தமிழர்களுக்காக பொது நினைவிடம் அமைக்கவேண்டும் என்று அரசுக்கு ஆதரவளிக்கும் ஈழ ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இதுபற்றி அவர் பேசும்போது, “இந்த போரில் வடகிழக்கு மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக உயிர் இழந்தனர். எனவே அனுராதபுரத்தில் பொது நினைவிடத்தை அமைக்கவேண்டும். மே மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமையை நினைவு தினமாக அறிவிக்கவேண்டும்“ என்றார்.

அதற்கு பதில் அளித்த ராணுவ ராஜங்க மந்திரி, “இது மிக முக்கியமான ஒன்றுதான். போரில் உயிர் இழந்த அனைவரும் நினைவில் கொள்ளப்படவேண்டியவர்கள். ஆனால் இதை ஒரு இனம், பிரிவு என்ற அளவுடன் நிறுத்தக் கூடாது. சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என போரில் பலியான அனைத்து பிரிவினருக்கும் அமைக்கவேண்டும்“ என்றார்.

இதுபற்றி எதிர்க்கட்சிகளின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சோய்சா கூறுகையில் “இதுபோல் பொது நினைவிடம் அமைத்தால் அது நாட்டின் அமைதி மற்றும் சமாதான முயற்சிகளுக்கு பங்கம் விளைவிப்பதாக அமையும்“ என்று குறிப்பிட்டார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply