ஐ.எஸ்.ஐ.எஸ்-இடம் வெறுமையான 11,100 சிரிய கடவுச்சீட்டுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடம், வெறுமையான நிலையில் 11,100 சிரிய நாட்டுக் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன என, ஜேர்மனிய அதிகாரிகள் நம்புவதாகவும், அந்தக் கடவுச்சீட்டுகள், எவரின் விவரங்களைக் கொண்டும் நிரப்பப்பட முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வாளர்களை மேற்கோள்காட்டி, ஜேர்மனியின் வாராந்தப் பத்திரிகையொன்று, இந்தச் செய்தியை, வெளியிட்டுள்ளது.

குறித்த வெற்றுக் கடவுச்சீட்டுகளின் தொடரிலக்கங்களின் பட்டியலையும், அவற்றை விநியோகித்த அதிகாரிகளின் விவரங்களையும், ஜேர்மனிய அதிகாரிகள் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தக் கடவுச்சீட்டுகள், வழக்கமான, உண்மையான கடவுச்சீட்டுகள் எனவும், எனவே, திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக இவை மாறுமெனவும் குறிப்பிடப்படுகிறது.

சிரிய அரச நிறுவனங்களிலிருந்து களவாடப்பட்ட, 18,002 வெற்றுக் கடவுச்சீட்டுகள் பற்றிய விவரங்கள், ஜேர்மனியிடம் இருப்பதாகவும், அவற்றில் 11,100 கடவுச்சீட்டுகளே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், 2015ஆம் ஆண்டு நவம்பரில், 130 பேரைக் கொன்ற தொடர் தாக்குதல்களுக்கு, சிரியாவின் போலியான கடவுச்சீட்டுகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால் வழக்கமாக, பயங்கரவாத நோக்கங்களின்றி, வேறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கே, இவ்வாறான கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply