நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக தேசிய பொருளாதார பேரவை ஆரம்பம்
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார பேரவை முதற்தடவையாக இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, சரத் அமுணுகம, சுசில் பிரேம ஜயந்த, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சமரதுங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் சாந்த பண்டார மற்றும் தேசிய பொருளாதார பேரவையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரக்கோன்
ஆகியோர் கூட்டத்தில் பங்குபற்றினார்கள்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply