‘பெல்ட்’ வெடிகுண்டு வழக்கு – ராஜீவ் கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்யவந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ‘பெல்ட்’ வெடிகுண்டை தயாரிக்க சதி செய்தது பற்றிய ஒரு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்குதாரரின் சார்பில் ஆஜரான வக்கீல், வழக்கை பிற்பகலில் எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் பிற்பகலில் நீதிபதிகள், வழக்கமான பிற வழக்குகளை கவனித்ததால், இந்த வழக்கை எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே வழக்கு விசாரணை தள்ளிப்போனது. இதற்கிடையே மத்திய அரசு சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply