கஹவத்தையில் பஸ் விபத்து – 23 பேர் வைத்தியசாலையில்
பத்கங்கொட மயான பகுதிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று கஹவத்தை, யாயின்ன பகுதியில் பாதையை விட்டு விலகி தடம்புரண்டதால் 23 பேர் காயமடைந்துள்ளனர். பாதையை விட்டு விலகிச் சென்ற குறித்த பஸ் மண் சரிவான பகுதியொன்றில் சாய்ந்ததன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்தவர்கள் கஹவத்தை ஆதார வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி பலாத்பத வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 9 பெண்கள் 11 ஆண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply