பலவந்த தடுத்து வைப்புக்கள் குறித்து விசாரணை : ஐ.நா குழு இலங்கைக்கு பயணம்
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த செயற்குழுவினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பலவந்தமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக நபர்களின் உரிiமைகள் முடக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்தக் குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். மனித உரிமை மற்றும் சட்ட திட்டங்களுக்கு அமைவாக குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து இந்த செயற்குழு தகவல்களை திரட்டிக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply