வடமாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் புதுடில்லி பயணம்
வட மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் இந்தியா செல்லவுள்ளனர். டில்லியில் எதிர்வரும் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்
வட மாகாண சபையின் 106வது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், பா.டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம், சி.தவராஜா, அ.பரஞ்சோதி, இ.ஆனோல்ட், க.சிவநேசன், சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, பி.சிராய்வா, அ.அஸ்மின், றி.பதியுதீன், கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், து.ரவிகரன், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், ஆகியோரே இவ்வாறு டெல்லி செல்லவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply