வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் லக்னோ தொகுதியின் முன்னாள் எம்.பி ஆவார்.  தற்போது உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள வீட்டில் அவர் தங்கி உள்ளார்.  அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் லக்னோ முகவரியிலேயே இருந்து வந்தது. அவர் பிரதமராக இருந்த போது, நடந்த தேர்தல்களில் லக்னோ ஓட்டு சாவடிக்கு வந்து ஓட்டு போட்டுள்ளார்.

இந்த நிலையில் லக்னோ பஸ் மண்டி ஓட்டுச்சாவடி வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.  அவர் வசித்த வீட்டு முகவரியில் பா.ஜனதா துணை அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாஜ்பாய் பெயர் நீக்கப்பட்டது பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாஜ்பாய் பெயரை நீக்கும்படி அவரது சார்பில் வேண்டுகோள் வராத நிலையில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அவரது பெயரை நீக்கி யுள்ளதாக உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்றும் அவர்கள்  அறிவித்துள்ளனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply