இலங்கை இராணுவத்திற்கு அகவை அறுபத்தெட்டு
இலங்கை இராணுவம் அதன் 68வது ஆண்டு நிறைவை எதிர்வரும் பத்தாம் திகதி கொண்டாடவிருக்கிறது. இதை முன்னிட்டு சமய நிகழ்வுகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன் துவக்க நிகழ்வாக, கண்டி தலதா மாளிகையில் விசேட புத்த பூஜை ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது, மகா சங்க சபையைச் சேர்ந்த அறுபத்தெட்டு பிக்குகளுக்கு தர்மம் வழங்கும் நிகழ்வும் கொடி ஆசீர்வதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இராணுவம் சார்பில் தலதா மாளிகைக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க உட்பட இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply