மீண்டும் மஹிந்த யுகம் ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டும் :பசில் ராஜபக்ஷ

மீண்டும் மஹிந்த யுகம் ஒன்று ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ச யுகத்தில் “வடக்கின் வசந்தம்” ஏற்படுத்தப்பட்டது. இதனூடாக தமிழ் மக்களுக்கு பாரிய அபிவிருத்தி ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக பசில் தெரிவித்துள்ளார்.

யாழ் மக்களை நேற்று சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மஹிந்த ராஜபக்ச யுகம் ஒன்றை உருவாக்கி, அந்த அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக வடக்கு மக்களுக்கு இதுவரை கிடைக்காத அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் ஏனைய அவசியங்கள் நிறைவேற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பசில், அங்குள்ள மக்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டார். இதன்போது கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நினைவு கூரப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply