தமிழ்ப் போராளிச் சந்தேகநபர்கள் மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்
தமிழ்ப் போராளிச் சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன. இது ஐரோப்பாவில் அரசியல்த் தஞ்சம் கோருவதற்காகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சிக் காலத்தில், கைது செய்யப்பட்ட 50இற்கும் அதிகமானோர் சித்திரவதை செய்யப்பட்டனர் எனவும், பாலியல் ரீதியான வதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும், அண் மையில் ஏபி செய்தி நிறுவனம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலரிடம் ஏ.பி. நிறுவனம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு அவர் கூறியுள்ளதாவது:
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. ஆதாரமற்றவை. பாலியல் மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் விடயத்தில், அரசு சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
அரசு எல்லாக் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரித்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவடைந்து, அவை மூடப்பட்டு விட்டன.
சிலவேளைகளில் நட்புக்கரங்களால் கூட இவை நிகழ்கின்றன. அவர்கள் கூறுவதன் அடிப்படையில் மாத்திரம், குற்றச்சாட்டுக்களை கருத்திற் கொள்ளக் கூடாது.
ஏனையவர்களின் கருத்துக்களையும் அறிய வேண்டும். இதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஏதே னும் குற்றச்சாட்டுக் கள் இருந்தால், அரசு சுதந்திரமான விசாரணையை வரவேற்கும்.
இந்தக்குற்றச்சாட்டுக் களின் அடிப்படையில், இலங்கைக்கான உதவிகள் குறைக்கப்பட வேண்டும் என்று கோருவது, நியாய மற்றது. இது ஒரு பகுதி மக்களுடன் தொடர்புடைய விடயம் அல்ல. இது எல்லோருக்குமானது. நிதி உதவிகள் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கு உரியதல்ல என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply