வடக்கு கிழக்கு இணைப்புக்கு தமது கட்சி விருப்பமில்லை: அமைச்சர் ஹக்கீம்
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு தமது கட்சி விரும்புவதில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்து வெளியாகிய அரசியலமைப்பு செயற்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது கட்சி எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு தமது கட்சி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply