பிரிட்டனில் நடுவானில் விமானம் -ஹெலிகாப்டர் மோதி விபத்து: 4 பேர் பலி

பிரிட்டனில் நடுவானில் இலகு ரக விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், 4 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதியுள்ளது. உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.30 மணியளவில் இந்த விபத்து நடைபெறுள்ளது. விபத்துக்குள்ளான வானூர்திகள் வேடிஸ்டன் எஸ்டேட் பகுதியில் விழுந்துள்ளன.

நடுவானில் மோதிய விமானம் ஹெலிகாப்டரின் பாகங்கள் கிடைத்ததை போலீசார் உறுதி செய்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply