சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணியில் இராணுவம்
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஒருபகுதியினர் தற்சமயம் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றைய பகுதியினர் தேவையேற்படும் பிரதேசங்களுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரின் 35 குழுக்கள் மாத்தறை பிரதேசத்திற்கும், அகலவத்தைக்கு 10 குழுக்களும், மில்லனிய பிரதேசத்திற்கு 15 குழுக்களும், பலபிட்டியவுக்கு 6 குழுக்களும், காலிக்கு 20 குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக விமானப்படையின் 30 பேர் அடங்கிய 26 குழுக்கள் விமானங்கள் மூலம் இரத்மலானை, அனுராதபுரம் மற்றும் ஹிங்குரங்கொட ஆகிய பிரதான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 30 குழுக்கள் படகுகள் மூலம் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக புகையிரத பாதைகளில் மண்சரிவுகள், மரம் முறிந்து விழுதல் காரணமாக ஏற்பட்டுள்ள புகையிரத போக்குவரத்து தடையை சீர்செய்வதிலும் இராணுவக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply