தென் கொரியாவில் இருக்கும் ஜனாதிபதி நாட்டு மக்கள் குறித்து அவதானம்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அனைத்து
நடவடிக்கைகளையும் விரைவாக மே்றகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள அவர் அங்கிருந்து ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளுக்கும் முப்படையினரையும் இணைத்துக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.
அதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ள மீனவர்கள் உள்ளிட்டவர்களை தேடும் நடவடிக்கையை விரைவு படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுதவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியாக 10,000 ரூபா நிதி உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply