சமூக வலைத்தளங்கள் தொடர்பான முடிவு இன்று
முகப்புத்தகம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்று (12) தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில்,
சமூக இணையத்தள இடையூறுகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று (12) நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
முகப்புத்தகம் ,வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது.
கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply