நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து 65 பேர் பலி?

நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 65 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வங்கதேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் 78 பயணிகளுடன் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.இதில் விமானம் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானம் முழுவதும் தீப்பற்றி எரிவதால் எஞ்சிய 65 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, மோசமான வானிலையால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமான விபத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply