அவசரகாலச் சட்டம் நீக்கம்

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு  கடந்த 7 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது.

குறித்த அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பில் நேற்றிரவு ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply