அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா? : கட்சியைக் கூட்டுமாறு சிரேஷ்ட அமைச்சர்கள் கோரிக்கை?
இதற்கு மேலும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கான அமைச்சு மாற்றத்துக்கு முன்னர் இது தொடர்பில் நிரந்த தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாகவும் அவர்கள் கோரவுள்ளனர்.
தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் எடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லையெனவும் அவர்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இக்கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றிரவு ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply