இராணுவத்துக்கு விழா எடுக்கும் பணத்தை அவர்களுக்கு உதவியாக கொடுங்கள்: அமைச்சர் பி. ஹரிசன்
இராணுவ வீரர் தின நிகழ்வு என பாரியளவில் செலவு செய்து பிரபல்யம் தேடுவதை விடுத்து, அதற்கு செல்லும் நிதியை இராணுவ வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த தியாகம் ஒருபோதும் மறக்கக் கூடியது அல்ல எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்த வெற்றியை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு பாரியளவு நிதி செலவிடப்பட்டது. அந்த வீண்விரயத்தையே இந்த அரசாங்கம் குறைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply