கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அதிகாலை பலி

மாத்தறை நகரிலுள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சாமர இந்திரஜித் என்பவர் இன்று (23) அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற முன்னர் தான் மறைத்து வைத்திருந்த பையொன்றை எடுப்பதற்கு பொலிஸார் சந்தேக நபரை மாத்தறை, கிரல காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன்போது, தனது பையிலிருந்த கைக்குண்டொன்றை பொலிஸார் மீது வீசத் தயாராகும் போது சந்தேக நபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாமர இந்திரஜித் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

வெயாங்கொட, மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சாமர இந்திரஜித் ஜயசுந்தர என்பவரே உயிரிழந்துள்ளார். மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply