தூர நோக்குடன் சிந்தித்து செயற்படுகின்றோம் : பிரதமர்
தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்துவதுடன் சர்வதேச சந்தைக்குள் செல்வதே எமது இலக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மில்லெனிய, பண்டாரகம பகுதியில் கட்டப்பட்ட உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்கு நாங்கள் தேசிய கைத்தொழில் துறைக்கு பக்கபலமாக பாரிய உதவிகள் பெற்றுக் கொடுக்கின்றோம். புதிய கைத்தொழிலாளர்களுக்கும் வரி நிவாரணம் பெற்றுக்கொடுக்கவும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் கொண்டுவரும்போதும் அதற்காக அறவிடப்படும் “வற்” வரியை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
2050 ஆம் ஆண்டாகும் போது இப்பகுதியில் சனத்தொகை மேலும் அதிகரிக்கும். நாம் தூரநோக்குடன் சிந்தித்து எதிர்காலத்தை கருத்தில்கொண்டே செயற்படுகிறோம். அதிக இலாபத்தை நோக்காகக் கொண்டு இலங்கைக்கு தருவிக்கப்படும் பொருட்களை நிறுத்தவும் தேவையான சட்டங்களை தயாரித்து வருகின்றோம் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply