மைக்ரோனேஷியாவில் கடலில் விமானம் வீழந்து விபத்து

தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவில் ஏயார் நியுகினி விமானம் ஒன்று ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்துள்ளது. கடலில் வீழ்ந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 47 பேரும் படகுகள் மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (வௌ்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் எமிலியோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

போயிங் 737 விமானம் உள்ளுர் நேரப்படி காலை 9.30 (2330 GMT) மணியளவில் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று தீவை சூழவுள்ள நீர்ப்பரப்பில் வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயணிகளும், விமானப் பணியாளர்களும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், யாருக்கும் பாரதூரமாக காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ட் மோர்ஸ்பியின் ஏர் நியூகினி விமான சேவை இது தொடர்பாக உடனடியாக எந்த அறிக்கையையும் விடுக்கவில்லை.

எவ்வாறாயினும், விசாரணையாளர்கள் சம்பவம் இடம்பெற்ற ஸ்தலத்திற்கு சென்றிருப்பதாகவும், விரைவில் அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆராய முடியும் என்று பப்புவா நியுகினியாவின் விபத்து விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற சம்பவம் ஒன்று கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் டென்ஸ்பர் ஓடுபாதையில் இடம்பெற்றது. லயன் எயார் விமானம் ஒன்று 101 பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்தோனேஷியாவில் தரையிறங்க முற்பட்ட போது ஓடுபாதையின் அளவு போதாமையால் கடலில் வீழ்ந்தது. அந்த சம்பவத்தின் போதும் பயணிகள் எவருக்கும் பாதிப்பு எதுவும் இன்றி படகுகள் மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply